Sunday 3 June 2012

விநாயகர் துதி

விநாயகர் துதி


இந்த பாடல் கம்பர் இயற்றிய பாடல் அல்ல. சொல்ல போனால் கம்பர் இயற்றிய பாடலை, கம்ப நாடான் எழுத்துக்களை படிக்க நீங்கள் கிட்டதிட்ட இருபது பாடல்கள் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்த விநாயகர் துதி பாடல் எனது பதிவு நல்ல படியாக தொடர வேண்டும் என்பதற்காக நான் போடும் இடுகை. அடுத்த இருபது பாடல்களும் காப்பின் புகழும், கம்பனின் புகழும் சார்ந்தது. இவை கம்பர் பாடிய பாடல்கள் அல்ல கமபரது ரசிகர்கள், கம்பராமாயணத்தின் பக்தர்கள் பாடிய பாடல்கள் ஆகும். எப்படி ஸ்ரீ ரங்கநாதரை கோயில் தெருவில் அடியெடுத்து வைத்த உடனே தரிசிக்க முடியாதோ, (முதல் கோபுரத்தில் இருந்து நீங்கள் ஆட்டோவில் செல்லாமல் நடந்தே சென்றால் ஒரு ஊரையே தாண்டி, சில மைல் தூரங்கள் கடந்து தான் கோயில் வாசல் படியை அடைய முடியும். பிறகு கோயிலில் வேறு, ஒன்றிரண்டு கிலோமீட்டர்கள் நடை இருக்கிறது) அது போலே தான் நூலின் ஆசிரியரை சென்று அடையும் முன் நீங்கள் செல்லும் ஆசிரியார் யார் தெரியுமா? அவர் பராக்கிரமம்  தெரியமா? இவர் தான் அவர் என்று (build-up intro என்று வைத்து கொள்ளுங்களேன்) அவர் பக்தர்கள் பல வருடங்கள் முன்பே இயற்றிய பாடல்கள் இவை. கம்பரது வரிகளை நீங்கள் வசிக்க எத்தனிக்கிறீர்கள் என்னும் பொது கண்டிப்பாக அந்த இடுகையில் நாங்கள் உங்களை உஷார் படுத்துகிறோம்  (அல்லது உஷார் செய்ய தான் வேண்டுமா? சிம்மத்தின் குரலை கேட்டாலே தெரியாதா?). சரி இப்போ விநாயகர் துதி,



பாடல்: பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
                இவை நான்கும் கலந்து உனக்கு நான்
               தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
              தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

பொருள்: பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேக வைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான கலவையாக உனக்கு நான் நைவேத்தியமாக அர்ப்பணிக்கிறேன். கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூமணியே (தூய்மை ஆன மணி போன்ற பொக்கிஷமே) நீ எனக்கு இயல் (உரைநடை), இசை (பாடல் நடை), நாடகம் (உணர்ச்சி நடை) என முப்பரிமாணத்தில் மிளரும் தமிழ் பொழியை அருள்வாயாக.

நோக்கம்: பதிவாளர் பிரதான இலக்கியத்தை விவாதிக்கும் முன், முயற்சி வெற்றி பெற விக்னங்களை தீர்க்க வினை தீர்க்கும் விநாயகரை வணங்குதல் ஆகும்.

விளக்கம்: பால், தேன், பாகு, பருப்பு இவை எல்லாம் கலந்த ஒரு விநாயகர் படையல் என்ன? வெறும் கலவையான ஒரு பச்சை படையலையா இந்த பாடலின் ஆசிரியர் விநாயகருக்கு படைப்பார்? உண்மையில் இது விநாயகர் ஆசிரியர் முன்னே தெய்வ வடிவமாக தோன்றி இருக்கும் பொது வாய் வழியாக எந்த வித பிரயத்தனமும் இல்லாமல் வந்த பாடல் ஆகும். இவ்வளவு பெருமை மிகுந்த பாடலில் வரும் சொற்களும் நிறைய உள்ளர்த்தங்கள் கொண்டதாகவே இருக்கும். இல்லையா? இந்த நான்கு உணவு பொருட்களும் விநாயகருக்கு உகந்த நைவேத்தியமான மோதகம்/கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள். பார்த்தீர்களா பாடலின் ஆசிரியர் விநாயகர் துதியில் ஒரு சமையல் குறிப்பையும் சேர்த்து அருளி உள்ளார்! அந்த மோதகத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன் இறைவா நீ எனக்கு முத்தமிழையும் அருளி செய்வாயாக என்று வேண்டுகிறார். அது என்ன முத்தமிழ், ஏன் கணிதமோ, இயற்பியலோ, வேற்பியலோ, கணினியோ தேவை இல்லையா? கணிதமோ, இயற்பியலோ, வேற்பியலோ, கண்ணினியோ இவை எல்லாவற்றிற்கும் மூலமே மொழி தானே, மொழி இல்லாமல் இதை படிக்கவும் முடியாது, உரைக்கவும் முடியாது, என் இவை எதிலும் புதிதாக கண்டுபிடித்தலும் நடத்த முடியாது. மொழியின் வல்லமை இல்லாமல் ஒரு கற்றல் நடைபெற முடியாது. எப்படி கணினியில் C , C ++ தான் பல முன்னணி சாப்ட்வேர்களுக்கு அடிப்படையோ, எப்படி  C , C ++ ல் தான் ஜாவா, SAP , oracale மற்றும் பல எழுதப்படுள்ளதோ அதுபோலே. மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் நூதன பாடல் இது. மொழி வேண்டும் மக்களே!!!! மானத்தில் கொள்ளுங்கள். தமிழை பேணுங்கள் கொண்டாடுங்கள். மற்ற மொழிகள் போல் அல்லாமல் முருக பெருமானால் அகத்தியருக்கு உபதேசிக்க பட்ட பொதிகையில் தோன்றிய செம்மொழி அல்லவா? எது ஒரே மூலத்தில் இருந்து 50 , 60  ஆயிரம் ஆண்டுகள் முன்பு பல பல காட்டு வாசிகளின் வட்டார பேச்சு வழக்காக மட்டுமே இருந்ததை முருக பெருமான் தனது தெய்வ சக்தியால் ஒழுங்குபடுத்தி இலக்கிய, இலக்கண விதிமுறைகள் இட்டு, எழுத்துருவமளித்து அகத்தியருக்கு அருளி செய்தவரானார்! இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் சில குழுவினர் நாங்கள் எங்கள் போக்கில் தான் பேசுவோம் என்று திரிந்ததினால் அந்த அந்த குழுவினரின் பேச்சு வழக்கு பலவாறாக சேர்ந்தும், திரிந்தும் தமிழை மருவிய மொழிகளாக மாறின. அவை மலையாளம், தெலுங்கு, கன்னடம், மற்றும் பலவாகும். ஆகவே விநாயகரை வணங்குங்கள், தமிழை கொண்டாடுங்கள், செழுமை பெறுங்கள்!


வீட்டுபாடம்: படிக்க இருப்பதோ வைணவ இலக்கியம், நூலின் ஆசிரியரே வைணவர், விநாயக துதி பாடல் எதுவும் அவர் எழுதவில்லை, நீ மட்டும் எதற்கு விநாயக துதி போடுகிறாய்? வைணவமும் சைவமும் பின்னி பிணைந்த மரபுகள். மாமனின் அவதார காதையை விவாதிப்பது மருமகனின் அருள் இல்லாமலா? நூலின் ஆசிரியர் கம்பர் அன்னை காளியின் அருள் பெற்ற  வைணவ மரபினரின் தத்துபிள்ளை என்பது தெரியுமா? அது போக போக! சரி வீட்டு பாடம், விநாயகர் துதியை இயற்றிய தமிழ் புலவர் யார்? அவர் குழந்தைகளின் மனம் கவர்ந்த புலவர். கருத்துகளில் சொல்லுங்கள்! மீண்டும் சந்திப்போம்!

No comments:

Post a Comment