Saturday 16 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 7


காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 7


பாடல்:
சம்பு அந்நாள் தன் உமை செவி சாற்றுபூங்
கொம்பு அனாள் தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வோம்

நோக்கம்
:
நூலாசிரியர் பெருமை, காப்பியத் தலைவன் பெருமை 

பொருள்:
சம்பு அந்நாள் தன் உமை செவி சாற்று (முற்காலத்தில் சிவன், தன் மனைவியாகிய பார்வதியின் செவியில் கூறிய)
பூங் கொம்பு அனாள் தன் கொழுநன் இராமப் பேர் பம்ப (பூங்கொடி போன்றவளான சீதையின் கணவனாகிய இராமனுடைய திருப்பெயர் பரவும்படி)
நாள் தழைக்கும் கதை பாச் செய்த கம்பநாடன் கழல் தலையில் கொள்வோம் (நாட்டு மக்கள் விரும்பி படிக்கும் இராமயணத்தை தமிழ்ப் பாடல்களாகச் செய்து அருளிய கம்ப நாட்டைச் சேர்ந்த கம்பரது திருவடிகளை நம் தலைமேல் சூடிக்கொள்வோம்)

விளக்கம்:
இராம நாமம் புண்ணியம் சேர்க்கும். "இராம இராமா" என்று ஜபித்துக் கொண்டிருந்தால் நாம் செய்த பாவங்கள் மட்டுமின்றி நம் வருங்கால பாவச் செயல்களும் இல்லாமல் போகும். நம் வீட்டில்  பெரியோர்களும், முதியவர்களும் எப்போதும் இந்த நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பதின் நோக்கம் புரிகிறதா? மேலும் நம்மையும் சிறு வயதினிலே இந்த நாமத்தை உரைக்க சொல்லும் பொது நமக்கு சில சமயங்களில் என் இப்படி படுத்துகிறார்கள் என்று தோன்றி இருக்கலாம்! இதோ இப்போது அந்த நாமத்தின் பெருமையை பாருங்கள்! சிவப்பெருமனே தனது தர்மப்பத்தினியான உமா தேவியிடம் இராம நாமத்தை மந்திரோபதேசம் செய்கிறார். இந்த இராமர் கொடி போன்ற இடையை உடைய சீதை என்னும் தாயாரை தனது மனைவியாக கொண்டவர்! இத்தகு பெருமை வாய்ந்த நாதனின் காதையை, இராமாயணமாக மக்கள் விரும்பும் வகையில் தமிழ் மொழியில் பாடல்களாக தொகுத்து பலரும் விரும்பி படிக்கும் படி செய்தவர் கம்பர். இதில் பல இடர்கள் உண்டு! இராமபிரான் போன்ற பெருமை வாய்ந்தவரை பாடவே ஒரு புலமையும், அறிவாற்றலும் வேண்டும். சென்ற பாடலிலேயே பார்த்தோம் அல்லவா? தேவாதி தேவர்களாலும் அவரை மனத்தில் கூட இருத்தி வைக்க முடியாது! அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை காப்பியமாக இயற்றினாலும் அதை மக்கள் விரும்பும் வகையில் இயற்ற வேண்டும். கம்பருடன் இராமக்காதையை ஒத்தக்கூத்தரும் இயற்றினார்! ஆனால் அவரது பாடல்கள் எங்கே சென்றது? ஒருவருக்கும் கிடைக்கவில்லை! கம்பரின் பாடல்களே பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கில் உள்ளது. இந்த பெருமையை உடைய கவிச் சக்கரவர்த்தியின் திருவடிகளை நாம் தலை வைத்து வணங்குவோம்.
இந்த பாடலில் நாம் இராம நாமத்தின் பெருமையையும், அன்னாரது காதையை இயற்றிய கம்பரின் பெருமையையும் ஒரு சேரப் பார்த்தோம்!




வீட்டுப்பாடம்:
1. ஒத்தக்கூத்தரின் இராமாயணம் என்ன ஆனது?
2. 
வாழ்க்கையில் இல்லாத பாவங்கள் எல்லாம் செய்து, திருட்டுகள் செய்து, கொலை மற்றும் பல கொடூர பாவங்கள் செய்து பின்பு இராம நாமத்தை ஜபித்து அந்த பாவங்களில் எல்லாம் இருந்து அதே பிறவியில் விடுப்பட்டு உலகம் போற்றும் புண்ணியப் பிறவியாகிய அந்த நபர் யார்? இராம நாமம் அவருக்கே இத்தனை நன்மைகள் பயக்கும் போது நமக்கு நன்மை பயக்காதா? அந்த நபரும் இராமக் காதையை இயற்றியவர் தான், அனால் வேறு மொழியினிலே!
கருத்துக்களில் உங்கள் பதிலை தெரிவியுங்கள்!

No comments:

Post a Comment