Sunday 3 June 2012

அறிமுகம்

இந்த தளத்தில் கம்ப ராமாயணத்தின் பாடல்களையும், அதன் பொருளினையும் விளக்கி பதிவுகள் இட போகிறேன். தினமும்
ஒரு பாடலுக்காவது பதிவு போட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். மிக மிக குறைவான ஒரு முயற்சி என்று எனக்கு பட்டாலும் (உங்களுக்கும் பட்டாலும்) எனது எதிர்பார்ப்பை குறைவாக வைத்து, அதை நாள் தவறாமல் கடைப்பிடித்து, நேரம் மிகுந்த நாட்களில் அதையும் தாண்டி பாடல்களை பதிவு செய்து ஒரு இணைய சிநேகத்தை வளர்த்து கொள்வதே இந்த பதிவுகளின் நோக்கம். நான் பாடல்களுடன் பொருளையும் தருவதால் நான் தமிழ் அறிஞன் என்று கொள்ள வேண்டாம். அதனால் நான் தவறு செய்தேன் என்றால் உங்கள் திருத்தங்களையும், கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். தமிழுக்கு நான் ஆற்றிய தொண்டு ஒன்றே ஒன்று தான், எனது பதினோராம் வகுப்பில் நான் பிற பள்ளி நண்பர்களை போலே பிரஞ்சு எடுக்காமல் எனது இரண்டாவது மொழி பாடமாக தமிழை எடுத்தது தான் (ஹி...ஹி...ஹீ). பள்ளி கூட extra curricular club தேர்ந்து எடுக்கும்போதும் எனக்கு தமிழ் குழுவை சென்று அடைய வேண்டும் என்று தான் தோன்றியது. எனது கம்ப ராமாயண ஈடுபாடு எனது ஒன்பதாம் வகுப்பில் தான் தொடங்கியது. பள்ளிகளுக்கு நடுவேயான (inter -school  competition) போட்டியில் நான் "பார்த்து, படித்து, ரசித்த தேன்" என்ற தலைப்பில் கம்ப ராமாயணத்தை பற்றி தான் பேசினேன். அப்பொழுது பார்வைக்கும், கற்றலுக்கும் மிக குறைவே அளவான இலக்கிய புத்தகங்கள் ஒரு சரா சரி பள்ளி மாணவனுக்கு இருப்பது போல் தான் எனக்கும் இருந்தது. கம்பரின் பாடல்களில் பொருள் விளக்கம் இல்லாமல் எந்த பாடல்களை எல்லாம் கற்று உணர முடியும் என்று நான் கண்டுப்பிடிதேனோ அந்த பாடல்களை எல்லாம் ஒரு உரையாக தயாரித்து அதை பேச்சு போட்டியில் உரையாற்றினேன். எனது அந்த பாடல் தொகுப்புகளில் எனது மனம் கவர்ந்ததும், எளிமையானதும், முக்கியமானதும்  அனுமரை புகழ்ந்து கம்பர் இயற்றிய "அஞ்சிலே ஒன்று பெற்றான்" என்ற பாடல் ஆகும். அப்பொழுது எனக்குள் ஒரு சூள் எடுத்து கொண்டேன், இந்த பாடல்களுக்கு பொருள் கிடைக்குமாயின் அதை விரும்பிய எல்லோருடனும் பங்கிட்டு கொள்வது என்று. கிட்டதிட்ட இருபது வருடங்கள் கழித்து இராமபிரான் அருளால் நன் இந்த முயற்ச்சியை தொடங்குகிறேன். வாழ்த்துங்கள், வாசியுங்கள், கற்று பயன் பெறுங்கள், இந்த தளத்தில் உங்கள் கருத்துக்கள், விளக்கங்கள், திருத்தங்கள், விவாதங்களை பதிவு செய்யுங்கள்!

No comments:

Post a Comment