Tuesday 7 August 2012

பாடல் 8: பாயிரம்: அவை அடக்கம்:







பாடல்:
முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ.

நோக்கம்:
கம்பர் தனது பாடல்கள் ஆராயத் தகுந்தவையும், அறிவு உடையவையும் அல்ல என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளுதல்!

பொருள்:
முத்தமிழ்த் துறையின் முறை போகிய (முத்தமிழ் நூல்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த) 
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென் (சிறந்த புலவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறிக் கொள்கிறேன்)
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் (பைத்தியக்காரர்களும், அறிவிலிகளும் சொன்ன வார்த்தைகளையும்)
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ (பக்தியில் ஆழ்ந்து இருப்பவர்கள் சொன்ன வார்த்தைகளையும் ஆராய முற்படலாமோ? அவை ஆராய தகுந்தவையா? இல்லை!)


விளக்கம்:
“முத்தமிழ் துறை” என்றால், மூன்று வகைத் தமிழ் வடிவத்தையும் அப்படின்னு பொருள். இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் அப்படின்னு தமிழ் மொழி மூன்று வடிவங்க்ளில் தழைத்து வளர்ந்து வந்துருக்கு. இயல் தமிழ் அப்படின்றது நாம் பேச்சு வழக்குலே பயன்படுத்தும் தமிழ். இசைத் தமிழ் என்பது பாடல்களில் தமிழை புகுத்தி புது புது இலக்கிய சொற்களையும், நவீன சொற்களையும், சிந்தனைகளையும் புகுத்தி அதை இசையின் மூலம் பறப்புறது. ஒரு பாடலை ராகம் போட்டு பாடும் பொது அதில் உள்ள சொற்களும், அதன் பொருளும் ஒவ்வொரு முறை பாடும் போதும் நம்மையாரியாமல் நாம் மனதில் பதியுது! நாடகத்தமிழ் என்பது இசைத்தமிழ் ஒத்துக்காத மக்களுக்கு. ஒரு சிலபேர் எழுக் காட்டு எட்டுக்காட்டுலே பாதை எடுத்து விட்டு பாடி சில செய்த்களை கூற முயற்சி செஞ்சா எழுந்து போய்டுவாங்க. “யார்ரா இவன் எப்போப் பார்தாலும் ராகத்தை எழுதுட்டே இருக்கான்?” அப்படின்னு சளிச்சுப்பாங்க. அப்படிப்பட்டவங்க ஒரு மேடையிலே இரண்டு பேர் உணர்ச்சிகரமா பேசி நடிச்சு அந்த கருத்தை பரிமாறி சொன்னாங்க என்றாள் காது கொடுத்துக் கேட்பாங்க. நடுவிலே நடுவிலே அம்மா பாசம் (அம்மா sentiment), தங்கச்சி பாசம் (தங்கச்சி sentiment), காதல் (love sentiment) எல்லாம் செதுக்கிட்டா நடைமுறை வாழ்க்கையை ஒட்டி நடக்கும் ஒரு நாடகத்தில் நாம் ஒரு செய்தியை சொல்லி விட முடிகிறது. அப்படி சேர்த்துப் பண்ணினா ஒரு மசாலா படம் வருது இல்லே? (drama). அதற்கு பெயர் தான் நாடகத் தமிழ். இந்த மூன்று வகைத் தமிழிணையும் “முறை போகிய உத்தமக் கவிஞர்கள்”. முறையாக போகித்த, முறையாக விருப்பமுடன் காற்று அவைகளை சுவைத்து மகிழ்ந்த நல்ல மனமுடைய சிறந்த கவிஞர்கள்.
           “ஒன்று உணர்த்துவென்” என்றாள் அப்படிபட்ட கவிஞர்களுக்கு ஒரு விஷயத்தை உணரும்படி சொல்லுவேன். பித்தர் - புத்தி சுவாதீனமில்லாதவர்கள். , பேதையர் – நடைமுறை அறிவு இல்லாதவர்கள்; பத்தர் – பக்தியில் தழைத்து அதிலே ஊறி நிகழ்கால வாழ்வு பற்றிய நினைவுகளை இழந்தவர்கள். பன்னப் பெறுபவோஎன்றால் ஒரு பொருட்டாக (serious ஆக எடுக்காமல்) எடுத்துக் கொல்லப்பட்டு ஆராயப்படுமோ? என்று பொருள் கொள்க. இதில் பலருக்கும் வரும் சந்தேகம் ஒரு பித்தனையும், முட்டாளையும் ஒரே தட்டிலே வச்சு பக்தணஓடு ஒப்பிட்டுப் பார்க்குறதா? அப்படின்ற சந்தேகம். ஆனா உன்மயா சொல்லப் போனா ஒரு கிருக்கணும், முட்டாலும் எப்படி எந்த விடக் கவலையும் இல்லாம தங்களோட உலகத்திலே அப்படியே ஊறிப் போய் இருக்குராங்களோ அப்படித் தான் ஒரு பக்தனும் இருக்குறான். குணாதிசயங்களை வைத்துப் பார்த்தால் இவங்க எல்லாருமே தராசுலே ஒரே சம அளவுளே தான் இருப்பாங்க. ஆனா எது மேன்மை நிலை அப்படினுப் பார்க்கும்போது தான் பாக்தான் மிக மென்மையான நிலையிலே இருக்குறான் அப்படின்ற உண்மை நமக்குப் புலப்பட ஆரம்பிக்குது. ஆனாலும் இவங்க எல்லோரும் சொல்லும் வார்த்தைகளும், செய்யும் செயல்களும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராம வினோதமாவும் சிறுபிள்ளைத்தனமாவும் இருக்கும் இல்லையா? அப்படித் தான் கம்பர் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறார். தனது எழுத்துகளும் அப்படிப் பட்ட முக்கியத்துவௌம் ஏதும் இல்லாத ஒரு கிறுக்குப் புலம்பல் என்று கூறிக் கொள்கிறார்.




No comments:

Post a Comment