Tuesday 7 August 2012

பாடல் 7: பாயிரம்: அவை அடக்கம்:










பாடல்:
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுன நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ.

நோக்கம்:
கம்பர் தனது பாடலின் மூலம் அவையடக்கம் எடுத்துக்காட்டல்

பொருள்:
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு (பல துறைகளை உடைய விருத்தப்பாக்களின் தொகுதியாகிய பாடல்களுக்கு)
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ் (உறைவிடமாகிய சான்றோர்களின் செவிகளுக்கு, என் பாடலை ஓதினால் யாழ் இசை என்னும் தேனைப் பருகிய)
நறை அடுத்த அசுன நல் மாச் செவிப் (அசுணம் என்னும் சிறந்த பாறவைக்கு அதன் சிறந்த செவிகளுக்கு)
பறை அடுத்தது போலும் என் பா அரோ (பறை ஓசை கேட்டதைப் போல இருக்கும்.)


விளக்கம்:
           இங்கே அடுத்த”, அடுத்த என்று கம்பர் தொடர்ச்சியாக பயன்படுத்தும் இந்த சொல்லுக்கு நிகர், ஒப்பானது என்று பொருள் கொள்ள வேண்டும். ஓர் நிலைக்கு அடுத்த நிலை அந்த நிலைக்கு மிக நெருக்கமான நிலை என்பதினாலும், அந்த நிலையை செம்மையாகக் குறிப்பிட அதன் அடுத்த நிலையை நாம் மேக்கொள் காட்ட முடியும் என்பதினாலும் அடுத்த நிலை அதற்குன் முன் உள்ள நிலைக்கு ஒப்பானதாகும். முதல் நிலையும் அடுத்த நிலையும் ஒன்றே என்றுக் கூற பெரும்பாலும் முடியாது தான். ஆனால் முதல் நிலைக்கு ஒப்பானதாக அடுத்த நிலை இருக்கும் என்ற உண்மையினால் புலவர்கள் “அடுத்த” என்ற சொல்லை “அது போல இது”, “இது எப்படியோ அப்படி அதுவும் இருக்கின்றது” என்ற அர்த்தத்தில் உபயோகிக்கின்றனர்.
           துறை என்றால் பிரிவுகள் என்று பொருள். “துறை அடுத்த விருத்தத் தொகை” என்றால் எப்படி பல பிரிவுகளும் துறைகளாக (departments) உள்ளனவோ அது போலே விருத்தப் பாக்களிலும் தொகை என்ற சொல்லை பிரிவுகளுக்காக தமிழில் பயன்படுத்துவார்கள். “உறை அடுத்த” என்றால் தங்குவது போல என்று கொள்ள வேண்டும். “நறை அடுத்த” என்றால் தேன் போல என்று பொருள். “செவிப் பறை அடுத்தது” என்றால் காதுகளில் ஒலித்தது போன்ற உணர்வு என்று பொருள். விருத்தப் பாக்கள் என்ற ஒரு வகை பாடல்களில் தொகை தொகையாக பிரிவுகள் இருக்கும். இந்த வகைப் பாடல்கள் தமிழில் இயற்றுவதற்கு ஒரு தேர்ந்த புலமையும், மொழி ஆளுமையும் வேண்டும். அப்படிபட்ட சான்றோர்களுக்கு விருத்தப் பாக்கள் இயற்றும் திறமை உள்ளே உறைந்திருப்பது போலே கை வந்த கலை. அந்த சான்றோர்களின் காதுகளில் கம்பரின்  பாடல் எப்படி ஒலிக்கின்றது தெரியுமா? பறவைகளில் அசுணம் என்ற ஒரு பறவை ஒரு விசித்திர குணம் வாய்ந்தது. அது தனது வாழ்நாளில் எப்போதாவது ஒரு இனிமையில்லாத குரலைக் கேட்டால் அது உடனே தனது உயிரை விட்டு விடுமாம். அதனால் அது உயிர் வாழ இனிமையான சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமாம். அதனால் தான் அந்த பறவையினம் இப்போது உயிரோடவே இல்லை. உலகத்தில் உள்ள அனைத்துக் கொடூரமான சத்தங்களையும் கேட்டு அந்த இனமே அழிந்து விட்டதோ என்னமோ (அடப் பாவி மக்கா இப்படி எவ்வளவு இனக் கொலைகள் தான் செய்வீங்களோ போங்க! மனிதர்கள் கேவலமானவர்கள்). அப்படிப்பட்ட அசுணம் என்னும் பறவை சிறிது இனிமையான சத்தத்தைக் கேட்டு காதிலே தேன் பாய்ந்தது போல் உணர்ந்து களிப்படைந்திருக்கும் போது, பாறை தம்பட்டை என்பன போல மிக ஒலி அதிர்வுகளும், இரைச்சலும் நிறைந்த வாத்தியங்கள் ஒலிக்கக் கேட்டு அந்த பறவைகள் வேதனையுற்று உயிர் விட துணிவதை போலே சான்றோர்கள் காதினிலே ஒலிக்கின்றதாம் கம்பரது பாடல். அப்படி தனது பாடல் பற்றி கம்பர் தானேக் கூறி கொள்கிறார்.

           உண்மையிலேயே கம்பரது பணிவுடைமை எல்லா எல்லைகளையும் தாண்டி இன்னும் நீண்டுக் கொண்டே போய் கொண்டிருக்கிறது. நாம எல்லோரும் சொல்றது போலே, “இது இவருக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?” என்று தான் கேக்கத் தோணுது. இந்த பாயிரம் பாடும் போது கம்பர் அவரோட இருக்கையிலே இருந்து எழுந்து “yes officer” அப்படின்றது போல மொத்தமா பம்மியிருப்பாரோ அப்படினுத் தோண வைக்குது. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். இப்படி பம்மி பம்மி அவர் பாய்ஞ்சு போடுற சொற்போர் எல்லாம் நீங்க பின்னாடி பார்க்க போறீங்க. “டேய் வேணாம்டா, ரொம்ப எதிர்பார்க்காதீங்க நான் ஒண்ணும் அவ்வளவு கெத்து இல்லை (நான் அவ்ளோ worth இல்லை யா!!!)” அப்படின்னு சொல்லி சொல்லி அப்புறம் “யாருக் கிட்டே? ஹ்ம்ம்ம்ம்...” அப்படினு ஒரே பாய்ச்சல் பயுவாரு பாருங்க! உண்மையிலேயே இந்த மாதிரி ஒரு பணிவுடைமை, தேவையான பணிவுக்கும் மேலே பணிவாக இருக்கும் ஒரு கபடப் பணிவுடைமையோ அப்படினு தான் சந்தேகிக்க வைக்கிறது. நீங்க என்ன நெனைக்குறீங்க? புலி பணியுது, பதுங்குது அப்படின்னா நாம அய்யோ பாவம்னு பக்கத்திலே போயி தடவிக் கொடுப்போமா? சொல்லுங்க?

வீட்டுப்பாடம்:
           தமிழில் இலக்கியப் பாடல்கள் நான்கு வகைப் படும்: 1. வெண்பா, 2. ஆசிரியப்பா, 3. கலிப்பா, 4. வஞ்சிப்பா; இதற்கும் மேல், தமிழில் மூன்று பாடல் இனங்கள் உள்ளது: 1. தாழிசை, 2. துறை, 3. விருத்தம். இதில் விருத்தம் என்பது எப்போதும் நான்கு அடிகளைக் கொண்டது. வெகு அரிதான சமயங்களில் மூன்று அடிகளில் விருத்தங்கள் காணப்படலாம். கம்பரின் இராமாவதாரம் நூல் முழுதுமாக விருத்தம் என்னும் பாடல் இனத்தை சார்ந்தது. அப்படியென்றால் இராமாவதாரம் எந்த பாடல் வகையை சேர்ந்தது? அது ஒவ்வொரு பாடலையும் பொறுத்தது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகையாக உள்ளது. ஆனால் அனைத்துப் பாடல்களும் விருத்தப் பாக்கள் தான்.
           இப்போ இந்த பிரிவுகள் எல்லாம் எதுக்கு அப்படின்னு நீங்க கேக்கலாம். அதற்கு என்னோட பதில்: தமிழ் பாடல்கள் எப்படி இருக்கணும், எப்படி ஒலிக்கணும் (sound பண்ணனும்) அப்படின்னு தமிழ் சான்றோர்கள் ஒரு கணக்கே வகுத்திருக்காங்க. என்னது கணக்கா? மொழியில் போயி எதுக்கு கணக்குப் போட்டாங்க? ஒரு பாடல் என்றால் அது இப்படி இப்படித் தான் இருக்கணும், இந்த இந்த மாதிரி ஓசை தான் இருக்கணும் அப்படின்னு ஒரு நியதி இருக்கு. நாலு வரி தான் இருக்கணும், ஒவ்வொரு வரியிலும் நான்கு சொற்கள் தான் இருக்கணும், ஒவ்வொரு சொல்லும் குறிளாகவும், நெடிலாகவும் ஒரு குறிப்பிட்ட கலவையிலே வரணும் இப்படி எல்லாம் கட்டுகள் போட்டு இயற்றினால் தான் அது பாடல் (கவிதை). இல்லைனா அது உரைநடை. இந்த நியதிகளை பத்தி நாம்ப் போக போகப் பார்ப்போம். நூத்துக்கணக்குலே நியதிகள் இருக்கு அப்போப்போ அதுகளை உங்களுக்கு மூர்ச்சை ஆகாத மாதிரி தொடுவோம்!
           இப்போ உள்ள கவிதைகள் எல்லாம் உரைநடை தான். இப்படி எந்த வித கட்டுக்களுமே இல்லாம வருகிற பாடல்கள் எப்படி உண்மையாகவே பாடல்கள்னு ஒத்துக்கிறது? அதிகபட்சம் இன்றைய பாடல்களில் பின்பற்றி வரும் ஒரே நியதி எதுகை மோனை மட்டுமே. அதுவும் வேண்டாம் எங்க வாய்லே இருந்த வர்ற தத்து பித்துகளை எழுத விடுங்க, அதையும் கவிதைன்னு ஒத்துக்குங்க அப்படினு சொல்லிட்டு ஒரு கூட்டம் அலையுது. அது என்ன கூட்டம் தெரியுமா? புதுக் “கவிதை” கூட்டம்!
           அப்படியென்றால் இப்போது வரும் சினிமாப் பாடல்கள் எந்த பாவகையையும், எந்த பாடல் இனத்தையும் சேர்ந்தது என்று கேட்கிறீர்களா? அவை எல்லாம் “தமிழ் கொலை” என்ற ஒரே பிரிவை சேர்ந்தது. என்ன ஒரு கொலவெறி?

No comments:

Post a Comment