Monday 26 May 2014

பாடல் 12: பாயிரம்: இடம்

பாடல் 12: பாயிரம் - இடம்




 பாடல்:
 நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் 
வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் 
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை 
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே.

நோக்கம்:
 இராமக் காதையை சொல்பவர்க்கு கிடைக்கும் பலன்களை நூல் ஆசிரியர் எடுத்து உரைத்தல்.


பொருள்:

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் 
(நீங்கள் விரும்பியதை அடையலாம், மேலும் அறிவுத் திறனும், பலரும் போற்றும் விதமாக புகழும் கிடைக்கப்பெறுவீர்கள்)

வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்  
(முக்தி மார்க்கத்தை அடையும் வழியும் கொடுத்தருளப் படுவீர்கள். நறுமணம்  பொருந்திய திருமகளும் உங்கள் மேல் அருட்பார்வை புரிவாள்)

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை  
(எண்ணிலடங்கா அரக்கர்கள் நிறைந்த போர்ப்படையை சாம்பல் என அழிந்துப் போகவைத்து)

சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே  
(வெற்றி மாலையை சூடியது  இராம பெருமானின் தோள் ஆகும். அந்த தோள் வலிமை மிகுந்த வில்லினையும் ஏந்தியதாகும். அப்படிப்பட்ட பெருமானின் பெருமையையும் அவரது தோள் வலிமையையும் போற்றி பாடுபவர்க்கு மேற்சொன்ன நன்மைகள் அமையப்பெரும்)

 

விளக்கம்:

இராம பெருமானின் வாழ்க்கை வரலாற்றை பிற்கால மனிதர்களான நாம் பின்பற்ற வேண்டிய அவசியத்தை இந்த செய்யுள் எடுத்துரைக்கின்றது. இராமப்பிரான் இந்த பூலோகத்தில் பிறந்ததே தீக்குனம் கொண்ட அழிவு சக்திகளை நம் சார்பாக எதிர்க் கொண்டு நமக்காக அதை அழித்து நமக்கு நல்வாழ்வு அளிக்க தான். அத்தகையவரின் புகழ் பாடுவதே நமக்கு பெரும் நன்மை ஆகும் மேலும் அதைக் காட்டிலும் பலன்கள் நாம் கிடைக்கப் பெறுவது நன்மைக்கும் மேல் நன்மை அல்லவா? அதனால் இராம நாமம் பாராயணம் செய்தால் எதற்கெல்லாம் இராமப்பிரான் எடுத்துக்காட்டாக  நின்றாரோ  அதை  எல்லாம்  அவரது  நாமமும்  மேலோங்க கடைப்பிடித்து  அவர்  சார்பாக  பக்தர்களுக்கு  அருள்  பாலிக்கும்.

இராமபிரான்  தர்மத்துக்கும்  நியாயத்திற்கும்  காவலாக  இருந்து  அறவழி  நடந்தவர்.  அவரின்  பார்வையில்  ஒருவனுக்கு  நியாயம்  கிடைக்க  வேண்டுமென்றால்  அவன்  பலம்  பொருந்தியவனாகவோ,  பெரிய  இடத்து  சகவாசம்  உள்ளவனாகவோ,  பணம்  படைத்தவனாகவோ இருக்க  வண்டிய  அவசியம்  இல்லை.  ஒருவன்  அறநூல்கள்  என்ன  வலியுறத்தி  இருந்க்கின்றனவோ  அதை செவ்வன்னே  செய்தால்  அவனுக்கு அந்த  சத்திய  கர்மமே  அரணாக  இருந்து  அவன்  குற்றமற்ற  நிலையை  தீர்ப்பாளர்களுக்கு  எடுத்துக்  காட்டி வேறு  எந்த  விதமான யுத்திகளும்  தேவை  இன்றி  அவனுக்கு  கிடைக்க  வேண்டிய  நீதியை பெற்றுத் தரும். இதற்கு இராமப்பிரான் ஒரு நல்ல அரசனாக இருந்து இந்த செயல்கள் செவ்வன்னே நடக்க பூலோகத்தில் இருந்த மட்டும் மேற்பார்வையிட்டார். இவ்வுலகை விட்டு வைகுண்டத்திற்கு சென்றப் பிறகு தனது வாழ்க்கையை பிறருக்கு பாடமாகவும், தனது நாமத்தை பக்தர்களுக்கு துணையாகவும் இருக்க செய்து அவைகளை அந்த மேற்பார்வையை தொடர்ந்து செய்ய துணை நிற்கின்றார். இதனாலேயே இராமப்பிரான் போற்றுதுலுக்கு உரியவர்.

பாரத தேசத்தில் இப்போது உணவிற்கோ, இருப்பிடத்திற்கோ, இல்லை உயிர் பாதுகாப்பிற்கோ எந்தவித பங்கமும் அசாதாரனாமாக இல்லை. அனால், நாம் அன்றாடம் பட்டினியும், வறுமையும், பிறரை வன்முறையால் துன்புறுத்தி ஆளுமை செளுத்தப்படுவதையும் பாரத தேசத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்போது நான் முன் கூறிய கருத்திற்கு இது முரணாக உள்ளதே? ஆம் அனால் இந்த குறைகள் இல்லாமையால் வந்தது அல்ல, பலமும் தனிச்சலுகைகளும் கொண்ட ஒரு சில அறிவிலிகளால் வந்தது. அப்போது இதை தடுக்க என்ன தான் செய்ய வேண்டும்? இராமப்பெருமானின் வாழ்க்கைப் பாடத்தை அமல் படுத்தினாலே போதும். ஒருவனக்கு உணவும், அதை வாங்க பணமும், இல்லாததிற்கு காரணம் அதை பதுக்கி வைத்து அதிக விலைக்கு சந்தையை கட்டுபடுத்தி லாபம் பார்க்கும் சிலரே காரணம். இதற்கு இராமப் பெருமானின் சபையில் உண்ண உணவில்லாதவனிற்கு உணவு, பணம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பது தீர்ப்பாகாது, உண்ணுவது ஒரு அடிப்படை தேவை அதை பணம் என்ற பண்ட மாற்று முறைக்கு உட்படுத்தாமல் அங்கே மனித உரிமைக்கும் அற வழிக்குமே சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.

இதுவே நமது ஒவ்வொரு அன்றாடத் தேவைக்கும் நாம் செயல் படுத்தத் தக்க ஒரு உத்தியாகும். உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், வணிகம், அரசியல் என்று எல்லா துறைகளுக்கும் இதை உட்படுத்தினால் ஒரு தர்மம் அந்த துறைகளில் இயற்கையாகவே உறைந்து இருக்கும். அப்போது உங்களுக்கு நீங்கள் நியாமாக வேண்டிய வாழ்வின் அடிப்படை தேவைகளும், மற்றும் இதர சவுகரியங்களும் அறவழியில் எல்லோருக்கும் கிடைப்பது போல் உங்களுக்கும் வந்து சேருமல்லவா? நீங்கள் உங்கள் துறையில் இராம தர்மத்தை செவ்வன்னே கடைப்பிடித்து நடந்தால் உங்கள் வேலையில் நீங்கள் முதிர்ச்சி பெற்று புகழ் பெறுவீர்கள் அல்லவா? உங்களுக்கு நிலையான ஒரு வேலை இருந்தால், உங்களுக்கு திருமகளின் அருட்பார்வையும் கிட்டி சௌபாக்கியராக திகழ்வீர்கள் அல்லவா? இராம நாமத்தை தெளிந்த மனதுடன் உரைத்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்த வாழ்க்கை நிறைவு பெறும் போது, வைகுண்ட லோகத்தை சென்றடைந்து அரங்கப்பெருமானின் காலடியைத் தழுவி முக்தி அடைந்து நிறைந்த பெருவாழ்வு வாழும் அல்லவா? இவை எல்லாம் வலிமைப் பொருந்திய தோள்களை உடைய இராமப்பருமானின் வாழ்க்கையை நாம் போற்றி பாடி பின்பற்றி நடந்தால் கிடைக்கும் நன்மைகள் ஆகும்.