Thursday 19 July 2012

பாடல் 4: பாயிரம்: அவை அடக்கம்
















பாடல்:
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ.

நோக்கம்:
இராமக் காதையை தான் இயற்றிடுதல் ஒரு சிறுத்தொண்டே என கம்பர் நமக்கு அவையடக்கத்துடன் உரைத்தல்

பொருள்:
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு (எப்போது இரைச்சலுடன் ஒலியை உடைய, உயர்ந்த பாற்கடலை அடைந்த ஒரு)
பூசை முற்றவும் நக்குபு புக்கென (பூனை, அதில் உள்ள பால் முழுவதையும் நக்கிக் குடித்துவிட முற்படுவதைப் போல)
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக் (ஆசை பற்றியதால் சொல்லத் தொடங்கினேன், குற்றம் இல்லாத)
காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ. (வீரத்தை உடைய இராமப் பெருமானின் கதையை)

விளக்கம்:
                                   கடவுள் வாழ்த்து முடிஞ்சப்பிறகு இப்ப தான் கம்பர் தன்னோட உண்மையான கவி நிலைக்கு (full form) வந்திருக்காருன்னு சொல்லணும். கடவுள் வாழ்த்துக்குப் அப்புறம் முதல் பாடலே பணிவா அவையை வணங்கிட்டு கம்பர் மேலே போலாம்னு ஒரு நூலுக்கே உண்டான நீதியை பின்பற்றனும்னு நினைத்திருப்பார் போல. அதான் கடவுள் வாழ்த்துக்கு அப்புறம் அவையடக்கம் வந்திருக்கு. அவை அடக்கத்திலே கம்பர் தன்னை எப்படி எல்லாம் தாழ்த்தி, அவையோரை எப்படி எல்லாம் உயர்த்தி பாடி தனது இலக்கிய படைப்பை ஏத்துக்கனும்னு சொல்றாரு பாருங்க. கம்பர் கிட்டே இருந்து இந்த பணிவை நாமக் கண்டிப்பா கத்துகனும்ங்க. ஒரு கவிச் சக்கரவர்த்திக்கே தன்னோட படைப்பை அரங்கேற்றம் என்ற பெயரில் ஒரு மக்கள் கூடத்துக் கிட்டே திணிக்கிரோம்னு எண்ணம் வந்து, நாம என்ன வேணும்னாலும் எழுதுவோம் அதை இவங்க வேறு வழியில்லாம கேட்டு தான் அகனும் அப்படின்னு இல்லாம நல்ல படியா எழுதணும், அதுக்கும் மேலே என்ன எழுதினாலும் அதை பொறுமையா கேக்க உக்கார்ந்திருக்குற இந்த மக்களை முதலே நாம பணிவா வணங்கனும் அப்படின்னு நல்ல சிந்தனை இருக்கு பாருங்க. இப்பவும் தான் பல சினிமா படங்கள் அரங்கேறுது, அதிலே ஹீரோ முதல்லே வந்த உடனே என்ன சொல்றான்? "வாங்கடா வேலை வெட்டி இல்லாத பசங்களா! இந்த உத்தமன, ஊரே கும்பிடுற மனிதருள் மாணிக்கத்தை பாருங்கட. நான் போடுற குட்டாட்டத்தையும், போலியான சண்டை காட்சியையும் (stunt sequence), ஹீரோயீனுக்கு சோப்பு போடுறதையும் பாருங்க டா. ஏன்னா நான் தான் அடுத்த தமிழக முதல்வர்" அப்படின்னு சொல்றான். இதிலே எது மேம்பட்ட அவை வணக்கம்னு நீங்களே கணிச்சுக்கொங்க. கம்பரோட அவை அடக்கத்தை படிக்கணும்னு நினைசீங்கன்ன மேலே படிங்க.
                                
பெருமாள் பள்ளி கொண்டு இருப்பது பாற்கடல் என்ற ஒரு கடலில். இந்த கடல் தண்ணியாலே ஆனது இல்லை. சுத்தமான பாலால் ஆனது. பால் பொங்கி பொங்கி அலையாய் முன்னும் பின்னும் வழியுமாம்! அதனால் இந்த கடலில் மற்ற கடல்களில் வரும் ஓசைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அலையோசை வருமாம். இப்படிப்பட்ட கடலுடன் கூடிய எம்பெருமானின் உலகம் எங்கே இருக்கிறதாம்? உயர்ந்த இடத்தில் எல்லா லோகங்களுக்கும் மேலே இருக்கிறதாம். அப்படிப்படட் பாற்கடலை மேலே உயர்ந்து சென்று ஒரு பூனை ஒரு ஓரத்திலே தன்னால் முடிந்த வரை நக்கி நக்கி சில துளி அளவு பாலை குடிக்க முயற்சித்து அதன் சுவையிலே மயங்கி இந்த பாற்கடல் முழுவதும் நாம் குடித்து முடித்து விட வேண்டும் என்று ஆசைக் கொண்டு முயல்வதை போலே கம்பரும், தான் இராமக்காதையை இயற்றும் முயற்சியும் ஒரு ஆசையால் எடுத்துக் கொண்டது என்றும், ஆனால் அது சாதாரண செயல் இல்லை, மலையளவு உழைத்தாலும் அதனினும் பெரிதாய் வளர்ந்து நிற்கும் ஒரு பெரும்பணி இது என்று கூறுகிறார். எதோ ஆசையாலே நான் இந்த செயலை தொடங்கிட்டேன். நான் முடிக்க முடியுமா என்று தெரியவில்லை (ஆனா பதினஞ்சே நாளிலே பதினோராயிரம் பாட்டுக்களையும் முடிச்சுட்டார்!) என்று இராமக்காதையை பெரிதாய் வைத்து, அதை கேட்கும் அவையோரை வணங்கி, தன்னை தாழ்த்தி பணிவாய் நிற்கிறார் கம்பர். இராமக்காதையை எப்படி பெரிதாய் வைக்கிறார் கம்பர்? இந்த இராமக்காதையின் நாயகன் இராமன் குற்றம் இல்லாத வீரனாம். குற்றம் இல்லாத வீரனா? அப்படி என்றால் என்ன? வீரன் என்றால் அந்த காலம் முதல் இந்த காலம் வரை எப்போவுமே தன்னை விட பலம் கம்மியனவர்களை எதிர்த்து ஜெயிச்சுட்டு அவன் தலையிலே மிளகாய் அரைச்சு அவன் உழைப்பிலே வாழக் கூடாது என்ற நியதி இருக்கின்றது. ஏன் இதை சொன்னேன்னா இந்த காலத்திலே இப்படி தான் தொன்னுத்தி ஒன்பது விழுக்காடு வீரர்கள் இருக்குறாங்க, இல்லையா? சத்திரியன் என்று சொல்லிக் கொள்ளும் ("சொல்லி கொள்ளும்!" பிறந்த இல்லை! ஒருவன் பிறந்தா மட்டும் ஒரு குலத்தை சார்ந்தவன் ஆக முடியாது ஆகவும் கூடாது. அவனோட படிப்பும் பால பருவமும் எந்த தொழிலை சார்ந்து இருக்கோ அந்த தொழில் உள்ள வகுப்பை அவன் சேர்கிறான். பின்னாளில் இதை திரித்து எல்லோரும் தவறாக பிறந்த உடனே பிராமணன், சத்திரியன் அப்படின்னு திர்ச்சுட்டானுங்க! அதனால் தான் கீழ் சாதி என்ற ஒரு கொடூரமான சமுதாய சூழல் உருவாகியது) ஒருவன் அறநூல்கள் சொல்லும் சத்திரிய கடமைகளை செய்ய வேண்டும். என்ன கடமை? அவன் வாழும் இடத்தில் தர்மம் தழைக்க தனது வீரத்தை பயன் படுத்த வேண்டும். சமுதாயத்திலே ஏழை, உடல் பளு குறைந்தவன், படிப்பறிவு குறைந்தவன் இப்படி பின் தங்கிய மக்களை ஏமாற்றி அவங்க கஷ்டத்திலே தனது சௌகர்யங்களை அனுபவித்து வாழ்க்கையை கடத்தும் ஒரு கும்பல் எப்போவுமே இருந்திருக்கு. அந்த கும்பலை அடக்கி, தேவைப்பட்டால் கத்தி, கதை, வில்லு, அம்பு எல்லாம் எடுத்து சண்டை போட்டு தர்மத்தால், பின்பு அது முடியாவிட்டால் வீரத்தால் சமுதாய நடுநிலைமையை கொண்டு வர வேண்டியது சத்திரயனின் கடமை. தர்மத்தாலும், வீரத்தாலும் இந்த அநியாயம் செய்பர்களை அடக்க முடியாவிட்டால், அவர்களை அழிக்கவும் சத்திரியனுக்கு அனுமதியும் அதிகாரமும் உண்டு. இதை அறநூல்கள் அவனுக்கு கொடுத்திருக்கு. மற்ற எந்த வகுப்பினை சேர்ந்தவருக்கும் அறநூல்கள் இந்த சலுகையை கொடுக்கலை, அவங்க எல்லாம் கொலை செஞ்சா அது பஞ்சமாபாவக் கணக்குலே வந்து சேர்ந்துடும். அப்படிப்பட்ட கடமை உடையவன் தான் சத்திரியன். இராமப்பெருமான் அரசக் குலத்தில் பிறந்ததினால் சத்திரியன் ஆகவில்லை. மாறாக சத்திரியன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பாலப்பருவத்தில் இருந்து பல வகை போர் வித்தைகளையும், அரசாட்சி தர்மங்களையும், நீதி நெறிகளையும் முறையே குற்றமற்று கற்றுக் கொண்டுள்ளார். அதனால் சத்திரியன்  ஆனார். அப்படி வீரன் ஆனவர் குற்றமற்ற வீரனாகவும் திகழ்ந்தார். "நீ உன் ராஜ்ஜியத்தில் ஒரு பின் தங்கிய மனிதன் கஷ்டப்பட்டான் அவனை மத்தவங்க தவறா ஆதிக்கம் செலுத்தி அநியாயம் செஞ்சாங்க அதை நீ கேக்காம விட்டுட்டே! உன்னை விட கீழே இருக்குறவனை அடிச்சு சாப்பிட்டு நீ இராஜாவா இருக்குறே. உணமையான அரசனாக நீ இல்லை" என்றெல்லாம் ஒருத்தரும் அப்பவும் சரி, இப்பவும் சரி, எப்பவுமே சரி இராமபெருமானையும் சரி அவரது மற்ற மூன்று தம்பிகளையும் சரி யாரும் கை நீட்டி குற்றம் சொன்னது இல்லையாம். அதனால் "குற்றமற்ற வீரன்" என்ற பெயர் வந்தது. சொல்லப்போனா பதினோராயிரம் ஆண்டுகள் அவர் அட்சி செய்த காலத்தில் மக்கள் எல்லோரும் சுகமா எந்த வித மனக் கஷ்டங்களும் இல்லாமல் வாழ்ந்த ஒரு பொற்காலம் என்று சொல்ல வேண்டும். இந்த பாழாய்ப் போன மக்களுக்காக தான் அவர் மனைவியை துறந்து, பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்தார்.
                           
இப்படிப்பட்ட குற்றமற்ற வீரன் கதையை இப்படிப்பட்ட சபையில் நான் சொல்லும் போது, மிக பணிவாக சொல்கின்றேன். எவ்வளவு பணிவு என்றால் இந்த குற்றமற்ற வீரனான இராமனின் மூல திருவுருவான சங்கு சக்கர தாரியான திருமால் பள்ளிக் கொண்டிருக்கும் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடித்து விட முயற்சிப்பது காண்போருக்கு பூனை எவ்வளவு சிறிதான உயிராக தெரியுமோ அவ்வளவு சிறிதாக நானும் என்னை நினைக்கும் அளவுக்கு பணிவுடன் இதை உங்களின் அரங்கில் ஏற்றுகின்றேன். இதில் பாற்கடல் என்று வந்ததினால் தான் கம்பர் தன்னை ஒரு பூனை என்று தாழ்த்திக் கொண்டுள்ளார். ஏனென்றால் பூனை பால் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளதால்! இல்லையென்றால் கம்பரின் பணிவு தன்னை தானே பூனையினும் கீழ் உள்ள ஒரு உயிருடன் ஒப்பிட தயங்காது (உதாரணத்திற்கு நாய்). அத்தகு பணிவை கம்பரிடமிருந்து இந்த பாடல் மூலம் நாம் கற்க முடிகிறது. மேலும் குற்றமற்ற வீரன் யார், இராமப்பெருமான் எப்படி குற்றமற்ற வீரன், அவர் அதனால் வணக்கத்திற்கு உரியவர் என்பதையெல்லாம் கூட நாம் உபரித் தகவல்களாக கற்றுக் கொள்ள முடிகிறது!



 வீட்டுப்பாடம்:
சென்ற பகுதியின் காளமேகப் புலவர் பாடல் பற்றிய கலந்துரையாடல்